நடிகர் நாசர் இயக்கி நடித்த ‘அவதாரம்’ என்ற படத்தில் அறிமுகமான பிரபல மேடை நாடக நடிகர் பாலாசிங் காலமானார். அவருக்கு வயது 67
அவதாரம் படத்திற்கு பின்னர் இந்தியன், ராசி, மறுமலர்ச்சி, தீனா, விருமாண்டி, புதுப்பேட்டை, வேட்டைக்காரன், என பல திரைப்படங்களில் பாலாசிங் நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு என தனி ரசிகர் கூட்டமே இருந்தது
இந்த நிலையில் சமீபத்தில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலம் தேறி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை 1 மணி பாலாசிங் காலமானதாக அறிவிக்கப்பட்டது
தற்போது பாலாசிங் உடல் அவரது சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் திரையுலக பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.