டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பழம்பெரும் சிறைச்சாலை ஒன்றுக்கு தளபதி விஜய் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது
இதனை அடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பழம்பெரும் சிறைச்சாலை ஒன்றில் நடைபெற இருப்பதாகவும் இதற்கு கர்நாடக அரசு அனுமதி கொடுத்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன
கர்நாடக அரசு கொடுத்துள்ள அனுமதிக் கடிதமும் தற்போது தொடரில் வலம் வந்து கொண்டிருக்கிறது
இந்த நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் விஜய் விஜய்சேதுபதி அந்தோணி வர்கீஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளனர்
விஜய், மாளவிகா மேனன், ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி, அந்தோனி வர்கீஸ், சாந்தனு, சஞ்சீவ், ரம்யா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.