அஜித் விஜய் உள்பட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகை தமன்னா தற்போது கைவசம் தென்னிந்திய படங்கள் எதுவும் இல்லாமல் உள்ளார். ஒரே ஒரு பாலிவுட் படத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான ‘பெட்ரோமாக்ஸ் மற்றும் ’ஆக்சன்’ திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க தமன்னா முடிவெடுத்து இருப்பதாகவும் முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்கும் இந்த வெப்சீரிஸ்ஸில் அவர் கவர்ச்சியாக நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன
இந்த வெப்சீரிஸ் திரைப்படம் போல் பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட இருப்பதாகவும், இதில் தமன்னாவுடன் முன்னணி நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது
தமன்னா நடிக்கும் இந்த வெப்சீரிஸ் ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது