ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா, கட்சி ஆரம்பிப்பாரா மாட்டாரா என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த விசயம் இழுபறியாகவே சென்று கொண்டிருக்கிறது.
எனக்கு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம் என்று ராஜாதி ராஜா படத்தில் வரும் என் கிட்ட மோதாதே பாட்டில் பாடி இருப்பார். முத்து படத்தில் கட்சி எல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு என படத்தில் பாடி இருப்பார்.
இப்படியாக ரஜினி மாற்றி மாற்றி பாடி ரசிகர்களை எதிர்பார்ப்பிலும் குழப்பத்திலும் வைத்துள்ளார்.
ஆனால் இவரின் அப்போதைய மாப்பிள்ளை படத்திலேயே இதற்கான மனநிலை அவருக்கு வந்து விட்டது என கூறலாம்.
மாப்பிள்ளை படத்தின் ஸ்ரீ வித்யாவுடன் பேசும் ஒரு காட்சியில், “அத்தே, நீங்க தமிழ்நாட்டுக்கு மகாராணி மாதிரி, ஆனா நான்? அதை விடுங்க, அதை ஏன் என் வாயாலேயே சொல்லிட்டு” என ஸ்டைலாக சொல்லி விட்டு செல்வார். இது போல் காட்சிகள் அவர் அரசியலுக்கு வருவதை அப்போதே உணர்த்தின.