கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி சிறுவயதிலேயே தாயை இழந்த திருமூர்த்தி பார்வை இழந்தவர். கேட்கும் திறனை வைத்து தமிழ் சினிமா பாடல்களை இனிமையாக பாடி வந்தார் திருமூர்த்தி. சில நாட்கள் முன் இவரை இவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து இவர் பாடிய கண்ணான கண்ணே பாடலை அப்லோடிவிட்டார்.
அது சமூக வலைதளங்களில் பயங்க வைரல் ஆகி ஓவர் நைட்டில் அனைவருக்கும் தெரிந்த முகமானார் திருமூர்த்தி.
இதைப்பார்த்த இசையமைப்பாளர் டி. இமான் தன் அடுத்த படத்தில் பாட வாய்ப்பளிப்பதாக கூறி வாய்ப்பும் அளித்துள்ளார். ரத்ன சிவா இயக்கும் சீறு என்ற படத்தில் செவ்வந்தியே என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.
இப்பாடல் முழுவதும் வெளியாகவில்லை ப்ரமோ மட்டும் வெளியாகியுள்ளது முழுப்பாடலும் டிசம்பர் 2ல் வருகிறது.