இயக்குனர் ஹரி தாயார் மறைவு: சூர்யா அஞ்சலி

பிரபல இயக்குனர் ஹரியின் தாயார் கனி அம்மாள் அவர்கள் நேற்று மாலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஹரி இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர்…

ce0ab6f07efb19207dbd762715869680

பிரபல இயக்குனர் ஹரியின் தாயார் கனி அம்மாள் அவர்கள் நேற்று மாலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹரி இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சூர்யா, கனி அம்மாள் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அன்னாரது இறுதிச்சடங்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கச்சன்விளை என்ற இடத்தில் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, ஆகிய படங்களில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன