சமுத்திரக்கனி ஆரம்ப காலத்தில் இயக்கிய படம் உன்னை சரணடைந்தேன் இந்த படம் நல்லதொரு காதல் கதை. கிராமத்து அப்பாவியான வெங்கட் பிரபுவுக்கும் நகரத்து பெண்ணான மீரா வாசுதேவனுக்கும் ஏற்படும் காதல் கதைதான் . படம் ஓரளவு விமர்சகர்களால் பேசப்பட்டது.
இந்நிலையில் அடுத்ததாக யாரும் தொடாத கதையாக நெறஞ்ச மனசு என்ற படத்தை இயக்கினர் இது கன்னக்கோள் வைத்து கொள்ளையடிப்பவர்களை பற்றிய கதை இது.
இதில் விஜயகாந்த் நடித்திருந்தாலும் கொஞ்சம் ஓவர் சென் டி மெண்ட் காட்சிகளை வைத்து படம் சொதப்பலாகி விட்டது.
அதன் பிறகு இவர் சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க ஆரம்பித்த உடன் இவரது திரையுலக இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் சிக்சர் விளாச துவங்கினார் சமுத்திரக்கனி. தொடர்ந்து நாடோடிகள், நிமிர்ந்து நில்,அப்பா உள்ளிட்ட படங்களை இயக்கி அதில் அட்வைஸ் கல்வி சார்ந்த , சமூகம் சார்ந்த அட்வைஸ்களை சொல்லிக்கொண்டு வந்தார்.
நல்ல விசயங்களை இவர் சொன்னாலும் இவர் ஸ்டைல் இப்படித்தான் என்றாகி விட்டது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு விசயம் அடுத்தவர்கள் அட்வைஸ் கேட்பது என்பது கசப்பான விசயமாக இருக்கும். நல்லவற்றுக்கே அப்பா , அம்மா, பள்ளி ஆசிரியர் சொல்லும் விசயங்களை அட்வைஸ்களை கேட்பவர் குறைவு.
அப்படி இருக்கும் பட்சத்தில் இவரின் படங்கள் ஓவர் அட்வைஸ்களை அள்ளி தெளிப்பது போரடிக்கிறது என கலவையான விமர்சனங்கள் வர தொடங்கி விட்டது.
கல்வி மட்டும் என்றில்லை, முட்டாள் தனமான விசயங்கள், சமூகம் சார்ந்த விசயங்கள் என எல்லாவற்றுக்கும் இவர் அட்வைஸ் மழையாக பொழிவது கொஞ்சம் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது உண்மை.
சாட்டை படத்தில் நடிக்க மட்டுமே செய்திருந்தார் அதுவும் ஸ்கூல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதான கதாபாத்திரத்தில் வாத்தியாராக நடித்திருந்தார். இதிலும் அட்வைஸ்க்கு பஞ்சமில்லாமல் இல்லை.
சமீபத்தில் வந்த கொளஞ்சி டிரெய்லரிலேயே மத ரீதியாக சில காட்சிகளில் பூசாரிக்கு அட்வைஸ் செய்வது போலவே பேசி இருந்தது சில அமைப்புகளிடம் இவருக்கு பிரச்சினையை பெற்றுக்கொடுத்தது.
இப்போது வந்திருக்கும் அடுத்த சாட்டை படமும் இப்படித்தான் அட்வைஸ்களை சமுத்திரக்கனி சொல்லி இருக்கிறார்.
அளவுக்கு மீறினால் அட்வைஸும் நஞ்சு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே சமுத்திரக்கனி படங்களை பார்ப்போரின் எதிர்பார்ப்பு.
சிறந்த நடிகரான இயக்குனரான சமுத்திரக்கனி வித்தியாசமான கதைகளை செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.