பிரபல வார இதழில் கதவைத்திற காற்று வரட்டும் என்ற தொடர் மூலம் பிரபலமாகி பெரும் புகழ்பெற்றவர் நித்யானந்தா. பிறகு ரஞ்சிதாவுடன் இவர் சேர்ந்து இருக்கும் பாலியல் ரீதியான காட்சிகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
சில வருடங்கள் முன் கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறினார். இப்படி வருடத்துக்கு ஒரு புகார் நித்தி மீது வந்து கொண்டிருந்தபோதும் கவர்மெண்ட் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் வந்தது.
இப்போது அவரின் குஜராத் ஆஸ்ரமத்தில் சில பெண்களை கடத்தி வைத்துள்ளார் என்று பெண்ணின் தந்தை ஜனார்த்தனன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நித்தியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டார் என்றும் கடந்த வருடம் 2018ல் கோர்ட்டில் ஆஜரான பிறகு அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டார் என்றும் அவர் கம்போடியாவில் இருக்கிறார்,ஈக்வெடார் நாட்டில் இருக்கிறார் தென் ஆப்ரிக்காவில் ஒரு தனித்தீவில் ராஜா மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் ஒரு சில பகுதியை நினைத்து தனி நாடாக அறிவிக்க கோருகிறார் அந்த நாட்டுக்கு கைலாஷ் நாடு என்றும் பெயர் வைத்து கைலாஷ் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியதாக செய்திகள் அறிவிக்கின்றன.
இந்தியாவால் தேடப்படும் நித்தி இப்போது கைலாஷ் நாட்டுக்கு யார் யார் வந்து குடிமகன் ஆகுறிங்க என்ற ரீதியில் ஒரு அப்ளிகேசன் பார்மை கைலாஷ் என்று தான் வைத்துள்ள வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார்