ரஜினிக்கு பாரதிராஜா கொடுத்த அடைமொழி – கொடி பறக்குது சுவாரஸ்யங்கள்!

இன்று இருக்கும் பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷன் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள். இவர்தான் ரஜினிகாந்த்தை வில்லனாக முக்கியமான பரட்டை என்ற ரோல் கொடுத்து பதினாறு வயதினிலே படத்தில் நடிக்க வைத்து புகழ்பெற வைத்தவர். ஆனால்…

இன்று இருக்கும் பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷன் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள். இவர்தான் ரஜினிகாந்த்தை வில்லனாக முக்கியமான பரட்டை என்ற ரோல் கொடுத்து பதினாறு வயதினிலே படத்தில் நடிக்க வைத்து புகழ்பெற வைத்தவர்.

706bbe7bd9d02a817049e7e449125ccb

ஆனால் இவரும் ரஜினியும் இணைய பல வருடங்கள் ஆனது. 12வருடங்கள் கழித்து இவர் இயக்கிய கொடி பறக்குது படத்தில்தான் இருவரும் இணையும் வாய்ப்பு கிடைத்தது.

32c3f8064cbaafcf9662b4fb776e66e6

படம் ஸ்டைலிஷ் ஆன படமாக இருந்தாலும் படம் பெரிதாக போகவில்லை. ஹம்சலேகாவின் இசையில் பாடல்கள்தான் பட்டைய கிளப்பியது.

இப்படத்தில் ஈரோடு சிவகிரி என்ற அதிரடி போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ரஜினியை அறிமுகப்படுத்தும்போது பாரதிராஜா அவர்களின் வழக்கமான குரலில் என் காதலுக்குரிய கறுப்பு ராஜகுமாரன் ரஜினியோடு மீண்டும் இணைகிறேன் என கூறி இருப்பார்.

ரஜினிக்கு நான் ரசிகனாய் ரஜினி எனக்கு ரசிகனாய் தாகம் கொண்ட இரு நதிகள் தழுவிக்கொண்டதுதான் கொடி பறக்குது என்று ஆரம்பித்திருப்பார் பாரதிராஜா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன