கிருஷ்ணகிரி அருகே நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. சிறுவயதிலேயே தாயை இழந்தவர் திருமூர்த்தி சினிமா பாடல்களை பாடி வந்தார்.
இவரது குரல்வளத்தை கண்டு உள்ளூர்காரர் எடுத்து போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி இவருக்கு பெரிய பெயரை பெற்று கொடுத்தது.
இமான் இசையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்து சீறு என்ற படத்தில் பாடியுள்ளார். அந்த பாடல் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் இப்பாடல் பாடியது குறித்து இமான் கூறியது என்னவென்றால்,
நொச்சிப்பட்டி திருமூர்த்தி அழகா இந்த படத்தில் பாடி இருக்கார் உங்களுக்கு எல்லாம் இந்த பாடல் பிடிக்கும்னு நினைக்கிறேன். வெறும் சிம்பதிக்காக{பரிதாபத்துக்காக} இவர் பாடலை ரசிக்க வேண்டாம் உண்மையிலேயே பாடல் பிடிச்சிருந்தால் இவரை வாழ்த்துங்கள் இவர் வெற்றியடைய உதவுங்கள் என கூறி இருக்கிறார் இமான்.