ரஜினியின் அடுத்தபட இயக்குனர் இந்த இளம் இயக்குனரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15ம் தேதி முதல்…

552351690fe17e9821c1459a7745bd3c

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’தலைவர் 169’ படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை மாநகரம், கைதி, மற்றும் தளபதி 64 படங்களை இயக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும், இதனையடுத்து இன்று மாலை ரஜினிகாந்தை நேரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ் இந்த படம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது

ரஜினிகாந்த் அரசியலில் களம் இறங்கும் முன் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால் அரசியல் கலந்த ஒரு விறுவிறுப்பான திரைப்படமாக இது இருக்கும் என்றும், லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது கலைபுலி எஸ் தாணு ஆகிய இருவரில் ஒருவர் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன