விஜய், அஜீத் படங்களுக்கு எப்போதும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது பெயர் வைக்கும் வழக்கம் சில காலமாக உள்ளது அப்படி சஸ்பென்ஸ் வைத்து ரிலீஸ் பண்ணாதான் ஒரு மாஸாக இருக்கும் என்பது இந்த நடிகர்களின் ரசிகர்களின் இப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என பலரின் எண்ணமாக இருக்கிறது.
சில நாட்களாகவே தல அஜீத் ரசிகர்கள், தளபதி விஜய் ரசிகர்கள் பட ஷூட்டிங் தொடங்கும்போதே ஆர்வக்கோளாறில் ஃபேன் மேட் போஸ்டர் தயாரிக்கின்றனர் அப்படியாக தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்துக்கு பெயர் வைக்காத நிலையில் சம்பவம் என பெயர் வைத்து ஃபேன் மேட் போஸ்டர் தயாரித்துள்ளனர்.
இது இன்னொரு குரூப்புக்கு கோபத்தை வர வைத்துள்ளது. இந்த சம்பவம் போஸ்டரை அதிக அளவில் வெளியே வைரல் ஆனது சிலருக்கும் குழப்பத்தை உண்டாக்கியதாம்.
ஸ்ரீகாந்த்,தினேஷ் மாஸ்டர் நடித்து வரும் படம் சம்பவம்
மைனா படத்தை தயாரித்த நிறுவனம்தான் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் ஏற்படுத்தியுள்ள குழம்பத்திற்கு சம்பவம் படத்தின் இயக்குநர் ரஞ்சித்பாரிஜாதம் விளக்கம் அளிக்க வேண்டியதாகிவிட்டது.
மூன்று வருடம் முன்பே இந்த டைட்டிலை நாங்கள் பதிந்து இப்போது படப்பிடிப்பு நடத்தி வரும் நிலையில் இப்படியொரு டைட்டில் எங்களுக்கு குழப்பம் அளித்தது. படக்குழுவிடம் கேட்டதற்கு அப்படியொரு டைட்டிலை வைக்கும் எண்ணம் இல்லை என உறுதியளித்துள்ளனர் என இயக்குனர் கூறியுள்ளார்.