அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க கமிட்டான நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சூர்யா அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக…

acc5afc6140c847053b45ad0f08e76a0

நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சூர்யா அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். அதிரடி ஆக்ஷன் படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தை மூன்று மாதங்களில் முடித்து கொடுக்க வெற்றிமாறன் வாக்கு கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இது ஒரு குறுகிய கால தயாரிப்பு படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது

1ac15c3c8704e3a9fde1253055b9ad17

இதனை அடுத்து வரும் ஏப்ரல் முதல் ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கும் கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படம் சூர்யாவுக்கு மீண்டும் ஒரு ’வேல்’ படம் போல் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று கருதப்படுகிறது

வெற்றிமாறன், ஹரி ஆகிய இரண்டு இயக்குனர்களின் படங்களை முடித்த பின்னர் பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக் கொண்டு இருப்பதாகவும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த 3 படங்களையும் நடித்து முடிக்க 2021 ஆம் ஆண்டு இறுதி ஆகிவிடும் என்பதால் அதன் பின்னரே அவர் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. அதற்குள் கவுதம் மேனன் தற்போது இயக்கிவரும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ மற்றும் ‘குயீன்’ஆகிய திரைப்படங்களை முடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன