வாகை சூடவா மூலம் அறிமுகமான ஜிப்ரான் , முதல் படத்தின் தலைப்பை போலவே வெற்றி வாகை சூடி வருகிறார். முதல் படத்தின் பாடலான சர சர சாரக்காத்து பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.
தொடர்ந்து கமலின் பல படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இவர் பணியாற்றினார்.
இவர் இசையமைத்து கடந்த வருடம் வெளியான ராட்சஷன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
படத்துக்கு இசை ஒரு பெரும்பலமாக இருந்தது. சீட்டின் நுனிக்கு வர வைத்த த்ரில்லர் படமான இதில் ஒரு அமானுஷ்ய கீ போர்டு இசை படத்தின் பலமாக கூட இருந்தது.
இதில் ஒரு காட்சியில் ஜிப்ரான் தோன்றி இசை பற்றி சில விளக்கங்களையும் கூறி இருப்பார்.
இப்படத்தின் மியூசிக் ஸ்கோர் புகழ் பெற்றதால் இப்படத்திற்கு ஜிப்ரானுக்கு பல விருதுகள் கிடைத்தன.
சர்வதேச அளவில் நடந்த ப்யூசன் பிலிம் பெஸ்டிவலில் இவருக்கு சிறந்த மியூசிக் ஸ்கோர் இசை அமைத்த விருது ராட்சஷன் படத்துக்கு கிடைத்துள்ளது.