ரஜினி-கீர்த்திசுரேஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவர் 168’படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி நேற்று வெளியானது இதனையடுத்து இன்று இதே படத்தில் நடிகை மீனாவுவும்…

ca2711eb766ddaa3ce8142b818de3bd0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவர் 168’படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி நேற்று வெளியானது

இதனையடுத்து இன்று இதே படத்தில் நடிகை மீனாவுவும் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மீனாவும், மகளாக கீர்த்தி சுரேஷூம் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இந்த படத்தின் வில்லனாக பிரகாஷ்ராஜ், காமெடி நடிகராக சூரி ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

டி. இமான் இசையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் இந்த படம் வரும் 2020-ம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன