சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் கமலஹாசன் போஸ்டர் மீது தான் சிறுவயதில் சாணி அடித்ததாக ராகவா லாரன்ஸ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று கமலஹாசன் அவர்களை ராகவா லாரன்ஸ் நேரில் சந்தித்து இது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்து பரப்பப்படுகின்றது என்று நான் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன்
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக் கொண்ட கமலஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியையும் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.