திரையுலகில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகருக்கும் அஜித் மற்றும் விஜய் ஆகியோர்களின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வகையில் ’கலக்கப்போவது யாரு’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற தீனா, தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்
கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுமே அவர் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது முக்கிய கனவான விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறியுள்ளது. ஆம், விஜய் நடித்துவரும் ’தளபதி 64’ படத்தில் ஒரு காமெடி கேரக்டரில் நடிக்க தீனா ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கும் விஜய்க்கும் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில இருப்பதால் தீனா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
’கைதி’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் ’தளபதி 64’ படத்தையும் இயக்குகிறார் என்பதால் கைதி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த தீனாவை இந்த படத்திலும் அவர் பயன்படுத்தியுள்ளார். ஏற்கனவே கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ், தளபதி 64 படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.