சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. பொங்கல் ரிலீஸ் என்பதால் அந்த படத்தின் குழுவினர் இரவு பகலாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் ’தர்பார்’ ரிலீஸாகும் அதே பொங்கல் தினத்தில் பிரபுதேவாவின் ’பொன்மாணிக்கவேல்’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் இந்த படங்கள் பின்வாங்க வாய்ப்பு உள்ளது
இந்த நிலையில் திடீரென தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் அதே பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக சற்று முன்னர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகும் என ’பட்டாஸ்’படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
இதனை அடுத்து ரஜினி படத்துடன் மோத தனுஷ் பட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதை அறிந்து கோலிவுட் திரையுலகம் அதிர்ந்து உள்ளது. ஆனால் இது குறித்து இரு படங்களின் வட்டாரங்களில் விசாரித்தபோது ரஜினியின் தர்பார் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி தனுஷின் ’பட்டாஸ்’திரைப்படம் ஜனவரி 16ம் தேதியும் ரிலீஸ் ஆகும் என்றும் எனவே இரு படங்களுக்கும் எந்தவித மோதலும் இருக்காது என்றும் கூறிவருகின்றனர்