தனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த அசுரன் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் சுருளி மற்றும் துரை செந்தில்குமார் இயக்கி…


0525fa56ea1c4000162b96e7c80ec7e0

தனுஷ் நடித்த அசுரன் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் சுருளி மற்றும் துரை செந்தில்குமார் இயக்கி வரும் பட்டாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது

இந்த நிலையில் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் கர்ணன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின்படி தனுஷின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த படம் தனுஷின் 44 வது படமாக உருவாக இருப்பதாகவும் இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 168 ’ என்ற படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன