பிரபல ஹீரோவின் அடுத்த படத்தில் இணைந்த நட்டி நட்ராஜ்

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ’நம்ம வீட்டு பிள்ளை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நட்டி நட்ராஜ் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே இந்த படத்தில் அவருடைய கேரக்டர் வலுவாக…


b19125aedac1ddb279f77451ff7b91ce

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ’நம்ம வீட்டு பிள்ளை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நட்டி நட்ராஜ் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே

இந்த படத்தில் அவருடைய கேரக்டர் வலுவாக இருந்ததாலும், படத்தின் மெயின் கதையில் அவருடைய கேரக்டர் முக்கியத்துவம் பெற்றதாலும் அவருடைய கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது

இந்த நிலையில் ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தை அடுத்து தற்போது அவர் தனுஷ் நடிக்க உள்ள அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ள ‘கர்ணன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் நட்டி நட்ராஜ் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க மோகன்லால் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன