நேரு குடும்பத்தை இழிவுபடுத்தியதாக நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இரண்டு மாதங்களுக்கு முன் பாயல் ரோகத்கி என்ற நடிகை இன்ஸ்டாகிராமில் அவதூறு பதிவு மேற்கொண்டதாக சர்ச்சை எழுந்தது
ஹிந்தி படங்கள் சிலவற்றில் நடித்துள்ள பாயல் செப்டம்பர் மாதம் 6 மற்றும் 21ம் தேதிகளில் தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரு குடும்பம் பற்றி அவதூறு வீடியோ பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதை கண்டித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் சார்மேஷ் சர்மா என்பவர் போலீசில் புகார் செய்ததன் அடிப்படையில் போலீஸ் விசாரணை செய்து இவர் மோதிலால் நேரு குடும்பத்தை பற்றி மோசமாக கூறியுள்ள வீடியோ ஆதார அடிப்படையில் அவரை கைது செய்துள்ளனர்.