நாட்டில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா சமீபத்தில் நிறைவேறியது இதை எதிர்த்து சமீபத்தில் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. கலவரங்கள் நடந்து வருகிறது. இப்படியாக நடந்த போராட்டத்தில் ஒரு பெண் போலீசை சிலர் தாக்குகிறார்கள்.
இதை நடிகை குஷ்பு கண்டித்துள்ளார். இது எதிர்ப்பு அல்ல .. இது வன்முறை .. நமது அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை நம்பி, நீதிக்காக போராடும் குடிமக்கள், இதுபோன்ற பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்ற முறையில் நடந்து கொண்டால் இந்தியாவின் ஆவி நீர்த்துப் போகும் .. இதை கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்