மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து திரையுலக பிரபலங்கள் ஒருசிலர் மட்டும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித் விஜய் சூர்யா உள்பட மாஸ் நடிகர்கள் யாரும் இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளனர்
இந்த நிலையில் சித்தார்த் உள்பட ஒரு சில நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்கள் இடம் வாங்கி கட்டிக் கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் பிக்பாஸ் ஆர்த்தி தனது டுவிட்டர் தளத்தில் குடியுரிமை சட்டம் குறித்து கூறியுள்ளதாவது: உலக வரலாற்றிலே வெளிநாட்டவர்க்கு குடிஉரிமை வழங்க வேண்டுமென போராட்டம், கலவரம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் மட்டுமே வாழ்வது ஆச்சர்யம்’ என்று கூறியுள்ளார்.
ஆர்த்தியின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் டுவிட்டர் பயனாளிகளின் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. நடிகை ஆர்த்தி தற்போது பாஜகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது