சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிப்பில் இயக்குனர் ஜே.டி.ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்னர் போடப்பட்டு தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தனியார் ஸ்டூடியோ ஒன்றில் சுமார் 10 கோடி செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் சமீபத்தில் போடப்பட்டது. இந்த செட் அஜித் அல்லது விஜய் படத்தின் பாடல் காட்சிக்காக போடப்பட்டதாக பலர் நினைத்துக் கொண்டிருக்க, தற்போது அந்த செட்டில் லெஜண்ட் அருள் சரவணன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள், நடன கலைஞர்களாக பணிபுரியும் இந்த பாடல் திரையில் பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் வண்ண வண்ண உடைகளில் அழகிகள் நடனமாடும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் இந்த படத்தின் கதையை ஒரு சமூக கருத்தை மையமாகக் கொண்டுள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்