நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாக இருந்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது
விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனை காரணமாகவே இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த படத்தை லைகா தயாரிக்கவில்லை என்று தெரிகிறது. இதனை அடுத்து போனி கபூரை சந்தித்த விக்னேஷ் சிவன் அந்த படத்தை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் போனிகபூரும் அந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. இதனால் சிவகார்த்திகேயன் விக்னேஸ்வரன் இணையும் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்பதால் விக்னேஷ்சிவன் தயாரிக்க இருந்த நெற்றிக்கண் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது
விக்னேஷ் சிவனின் இந்த முடிவால் நயன்தாரா அதிர்ச்சியில் இருந்தாலும் அந்த படத்தை தானே சொந்தமாக தயாரிக்க ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது