வைரமுத்துவுக்கு பட்டம்- எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி -தவிர்த்த மத்திய அமைச்சர்

நாளை காலை 11 மணியளவில் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஒரு விழா நடைபெற இருந்தது. இதில் கல்லூரி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் , மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதாக இருந்தது. இதில்…

நாளை காலை 11 மணியளவில் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஒரு விழா நடைபெற இருந்தது. இதில் கல்லூரி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் , மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதாக இருந்தது.

7badb8e7fe7817cd00dafa434c00e490-2

இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு வைரமுத்துவுக்கு பட்டம் வழங்குவதாக இருந்தது. இதை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியினர் அனைவரும் எதிர்த்தனர்.

ஆண்டாள் நாச்சியாரை அவமானப்படுத்திய வைரமுத்துவுக்கு விருதா அதுவும் பாஜக மத்திய அமைச்சர் கையால் விருதா என கொந்தளிந்தனர்.

மார்கழி மாதம் ஆண்டாளுக்குரிய மாதமாக கருதப்படுகிறது அப்படியான மார்கழி மாதத்தில் ஆண்டாளை பழித்த வைரமுத்துவுக்கு ராஜ்நாத் சிங் வழங்க கூடாது என சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர்.

எப்படியோ இந்த விசயம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் காதுக்கு சென்று விட்டது. உடனடியாக அவர் இந்த விழாவிற்கு வருவதை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன