எஸ்ஜே சூர்யா நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக இயக்குனர் ராதாமோகன் நடத்திவருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக இந்த படத்தின் டைட்டில் ’பொம்மை’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு எஸ்ஜே சூர்யாவின் படத்தின் புரமோஷனுக்கு உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.ஜே.சூர்யாவின் படத்தின் டைட்டிலை தனுஷ் முதல்முறையாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,
யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருப்பதாகவும், இந்த பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.