70 வயதிலும் அதற்கு மேலும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் எல்லாவற்றையும் குறைக்கவேண்டும் என ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற தர்பார் படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் கூறியுள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் புரமோஷன் விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் ’தன்னிடம் பலர் கேட்கும் கேள்வி என்னவெனில் எழுபது வயதிலும் எப்படி இளமையாக இருக்கிறீர்கள் என்றும் எனர்ஜியாக இருக்கிறீர்கள் என்றும் கேட்கிறார்கள்
அதன் ரகசியம் இதுதான். எந்த வயதிலும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் ஆசையை குறைக்க வேண்டும், கவலையைக் குறைக்க வேண்டும், உணவைக் குறைக்க வேண்டும், தூக்கத்தை குறைக்க வேண்டும், முக்கியமாக பேசுவதை குறைக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் குறைத்தால் நிச்சயம் எனர்ஜியாக வாழலாம் என்று அவர் கூறினார். ரஜினிகாந்தின் இந்த அறிவுரை தற்போது இணையதளங்களில் வைரலாக ஆகிவருகிறது