சமீபத்தில் தெலுங்கு திரை உலக விருதுகளை ஜீ சினிமா நிறுவனம் அளித்த நிலையில் இந்த விருதினை சிரஞ்சீவி மற்றும் சமந்தா பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சயிர நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த ஜீ சினிமாவின் சிறந்த நடிகர் விருது சிரஞ்சீவிக்கு அளிக்கப்பட்டது. அதேபோல் ’ஓ பேபி’ மற்றும் ‘மஜிலி’ படங்களில் சிறப்பாக நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகை விருது அளிக்கப்பட்டது
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட்டன. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்த ஷாரதா ஸ்ரீநாத்க்கு ’ஜெர்சி’ படத்தில் நடித்ததற்காக விருதும், அதே படத்தில் நடித்த நடிகர் நானிக்கும் விருது வழங்கப்பட்டது
மேலும் வாழ்நாள் சாதனை விருது பழம்பெரும் இயக்குனர் கே விஸ்வநாத் அவர்களுக்கு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது