மதுரை பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சற்றுமுன்னர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் அழைப்பு ஒன்றில் மதுரையில் உள்ள பேருந்து…


7d1d3bcf69f6e20e7e8e5fa2566d1a72

மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சற்றுமுன்னர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் அழைப்பு ஒன்றில் மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து மதுரை போலீசார் உஷார் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் மதுரை முக்கியமான இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தீவிரவாத தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன