தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பண்டிகை சூழலுக்கும் பாடல்கள் உள்ளன. முக்கியமாக இளையராஜா இசையமைத்த இளமை இதோ இதோ என்ற பாடல் ஒவ்வொரு புதுவருடத்திற்க்கும் அனைவரும் ஆட பாட உபயோகிக்கும் பாடலாகும்.
இது போல இசையமைப்பாளர்கள் அனைத்து சூழ்நிலைகளுக்கும் பாடல் போட்டிருந்தாலும் இசைஞானி இளையராஜாவையே நாம் இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டியதாகியுள்ளது.
வாழ்வு , சோகம், துக்கம் மகிழ்ச்சி என அனைத்திற்கும் பாடல் கம்போஸ் செய்துள்ள இளையராஜா, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், போன்ற பெரிய பண்டிகைகள் மற்றும் வாழ்வில் வரும் சின்ன சின்ன பண்டிகைகளுக்கு கூட படத்தின் சூழலுக்கேற்ப இசையமைத்துள்ளார்.
தற்போதைய வறட்சியான தமிழ் சினிமா பாடல்களுக்கு நடுவே இவரின் பாடல்களே பண்டிகைகளை தாங்கி பிடிக்கின்றன.
முன்பெல்லாம் பாடல்களை டிவி, வானொலிகளில் ஒளிபரப்புவர் நாம் கேட்டு மகிழ்வோம். தற்போதைய இளைய ஆண்ட்ராய்டு தலைமுறை ஸ்முல். டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் பாடி மகிழ்கின்றனர். நடித்து மகிழ்கின்றனர்.
அப்படியாக இளையராஜா இசையமைப்பில் உருவான மகாநதி திரைப்படத்தின் தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாடல்தான் பல நிகழ்ச்சிகளின் முன்னோட்ட ரிங்டோனாக உள்ளது. பல டிவி, ரேடியோ நிகழ்ச்சிகளின் ப்ரோமோவாக இந்த பாடலின் ஆரம்பமே தேர்வு செய்யப்படுகிறது.
இது போல இளையராஜா இசையமைத்து மணிரத்னம் இயக்கத்தில் தீபாவளிக்கு வந்த படமான தளபதி பாடல் பொங்கலுக்கு அனைவரும் கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.
மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஓ ஹோய், என்ற அந்த பாடல் தற்கால இளைய தலைமுறையையும் இழுத்துப்போட்டு வசப்படுத்தியுள்ளது.
பூ பூக்கும் மாசம் தை மாசம் என்ற வருஷம்16 படத்தின் பாடல் மிக புகழ்பெற்ற இளையராஜாவின் முணுமுணுக்க வைத்த பாடலாகும்.
இன்னும் ஏரெடுத்து ஏரெடுத்து பாடுபடு பாடுபடு என்ற முத்துக்காளை படப்பாடல், இந்த பூமியே எங்க சாமியம்மா என்று ஆரம்பிக்கும் அதிரடி கிராமிய இளையராஜாவின் பாடல்கள் இந்த மண் இருக்கும் வரை மனதில் நிலைக்கும்.