’மாநாடு’ படத்திற்காக அதிகபட்ச ரிஸ்க் எடுக்கும் சிம்பு: வைரலாகும் வீடியோ

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இதனை அடுத்து படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்புக்கு தயார் நிலையில் உள்ளனர்…


416cd3fe35adcac0100671cfa2040edb

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இதனை அடுத்து படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்புக்கு தயார் நிலையில் உள்ளனர்

இந்த நிலையில் சிம்பு இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு அவர் ரிஸ்க் எடுத்து பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

சிம்பு இதுவரை எந்த ஒரு படத்திற்காகவும் இந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு உடல் எடையை குறைக்க அவர் பயிற்சியில் ஈடுபட்டது இல்லை என்றும், முதன்முறையாக இந்த படத்திற்காக சிம்பு ரிஸ்க் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் சிம்பு ஒரு முஸ்லிம் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் அரசியல் நரித்தந்திரம் உள்ள ஒரு கேரக்டர் என்றும் தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத கேரக்டர் என்றும் வெங்கட்பிரபு தரப்பினர் தெரிவித்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன