தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
இந்நிலையில் சென்னையில் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இதில் விஜய்-விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் விஜய்-விஜய்சேதுபதி ஆக்ரோஷமாக மோதும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை நெய்வேலியில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் நெய்வேலி செல்ல உள்ளனர். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இந்த சண்டைக்காட்சி படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக சிறப்பு அனுமதியை பெற முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் ஆக்ரோஷமான சண்டைக்காட்சியாக இந்த சண்டைக்காட்சி இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது