சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ திரைப்படம் வெளிவந்தது இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இராமாயணத்தை இழிவாகப் பேசிய சைக்கோ சினிமா இயக்குனர் மிஷ்கினின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தின் மீது மாற்று மதத்தினர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது. சரியான எதிர்வினையாற்ற வேண்டும்.
எச்.ராஜாவின் இந்த கண்டனத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.