டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் எட்டாம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எது என்பது குறித்த கருத்துக் கணிப்பின் தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது
டைம்ஸ் நெள வெளியிட்டுள்ள கருத்து கணிப்பின் படி இந்த தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 50 முதல் 60 தொகுதிகளில் வரை கிடைக்கும் என்றும் அந்த கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது
அதேபோல் பாஜகவிற்கு 5 முதல் 10 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் கிடைக்கும் என இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின்படி மீண்டும் இரண்டு தேசிய கட்சிகளை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சியில் அமர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது