பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி திருமணம் என உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று காலை அவருக்கு அவருடைய குலதெய்வம் கோவிலில் திருமணம் நடந்தது
மஞ்சு பார்கவி என்ற மணப்பெண்ணுக்கும் யோகிபாபுவுக்கும் குலதெய்வ கோவிலில் பெரியோர்கள் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணம் ஒரு நிச்சயக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த திருமணத்தில் இரு குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் யோகி பாபு-மஞ்சுபார்கவி திருமண வரவேற்பு சென்னையில் மிக விரைவில் நடைபெற இருப்பதாகவும் இந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று யோகிபாபு திருமணம் நடைபெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது