விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் காரணமாக விஜய் நிச்சயம் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் திடீரென விஜய்யின் அரசியலுக்கு பிரசாந்த் கிஷோர் உதவ இருப்பதாகவும் ஆந்திராவில் ஜெகநாதன் ரெட்டியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது போல் விஜய்யை தமிழகத்தில் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பார் என்றும் குறிப்பிட்டு போஸ்டர்கள் அடித்து ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தற்போது திமுகவுக்காக தேர்தல் பணி செய்துவரும் பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு பணி செய்வாரா? என்பதையும் விஜய் ரசிகர்களின் கனவு பலிக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்