அனிருத் ஏமாற்றிவிட்டார்: குட்டிக்கதை பாடலால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற குட்டி கதை பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடல் வரிகளில் விஜய் பாடிய இந்த பாடல் ’ஆளப்போறான் தமிழன்’…


70f0fb356a0b3da06b565632ede55b65

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற குட்டி கதை பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடல் வரிகளில் விஜய் பாடிய இந்த பாடல் ’ஆளப்போறான் தமிழன்’ போல் அசத்தலாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்
ஆனால் சற்று முன் வெளியான இந்தப் பாடல் மிகவும் ஸ்லோவாக ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது போல் தமிழ் ஆங்கிலம் கலந்த வார்த்தைகளில் உருவாகி உள்ளது. இதுபோன்ற பாடல் ஒய் திஸ் கொலைவெறி உள்பட ஏகப்பட்ட பாடல் வந்து விட்டதால் இந்த பாடல் யாரையும் பெரிதாக கவரவில்லை என்று கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளையும் டீனேஜ் இளைஞர்கள் மத்தியில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது இந்த பாடல் அவர்களுக்கு அவர்களுக்கான பாடல் என்று கூறப்பட்டாலும் நடுத்தர வயதினர்களுக்கு ஏமாற்றமே என்று கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன