இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று ஏற்பட்ட விபத்திற்கு காரணமாக இருந்த கிரேன் இயக்கிய நபர் தலைமறைவானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைத்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திடிரென கிரேன் சரிந்து விழுந்ததால் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் ஒருவர் ஷங்கரின் உதவி இயக்குனரும் கார்ட்டுனிஸ்ட் மதனின் மருமகனும் ஆவார்.
இந்த விபத்தில் கிரேனை இயக்கிய நபர் மீது தற்போது போலீஸ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், ஆனால் இவர் தற்போது ர் தலைமறைவாகிவிட்டார் அவரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.