ஏர் இந்தியா நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல தமிழ் நடிகை

ஜிவி பிரகாஷ் நடித்த புரூஸ்லி என்ற படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி என்ற நடிகை சமீபத்தில் மும்பையில் இருந்து கோவாவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றார் அப்போது அவரது லக்கேஜ் மாற்றி கொடுத்து விட்டதாக…


1db0c65ff5cf363845695bd58802f335

ஜிவி பிரகாஷ் நடித்த புரூஸ்லி என்ற படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி என்ற நடிகை சமீபத்தில் மும்பையில் இருந்து கோவாவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றார்

அப்போது அவரது லக்கேஜ் மாற்றி கொடுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஏர் இந்தியா நிர்வாகத்திடம் கேட்டபோது ஊழியர்கள் சரியான முறையில் பதில் சொல்லவில்லை என தெரிகிறது.

இதனை அடுத்து அவர் காட்டமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். இந்த டுவிட் பதிவு செய்து அடுத்த சில நிமிடங்களில் ஏர் இந்தியா நிறுவனம் பதிலனுப்பியதோடு, அவருடைய லக்கேஜ் கோவாவில் இருப்பதாகவும் அதனை உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளது

இதனை அடுத்து ஏர் இந்தியா ஊழியர்கள் முதலில் பயணிகளிடம் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள அறிவுறுத்துங்கள் என்று நடிகை கீர்த்தி கூறியுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன