சார்லி- பிறந்த நாள் பதிவு

நகைச்சுவை நடிகர் சார்லி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சினிமாவில் இயக்குனர் சிகரம் என புகழப்பட்ட திரு கே.பாலச்சந்தர் அவர்களால் அவரின் பொய்க்கால் குதிரை படம் மூலம் அறிமுகமானவர் சார்லி. எண்பதுகள் துவங்கிய…

நகைச்சுவை நடிகர் சார்லி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சினிமாவில் இயக்குனர் சிகரம் என புகழப்பட்ட திரு கே.பாலச்சந்தர் அவர்களால் அவரின் பொய்க்கால் குதிரை படம் மூலம் அறிமுகமானவர் சார்லி.

cf16d0441e0464e6d7529ba9fd2a2896-1

எண்பதுகள் துவங்கிய சில வருடங்களில் இருந்தே தொடர்ந்து நடித்து வரும் சார்லி , வருஷம்16, வெற்றிகொடி கட்டு,பூவே உனக்காக, வெள்ளைப்பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பை வாரி வழங்கியுள்ளார்.

சார்லி மிக நன்கு படித்தவர் என்பது பலருக்கும் தெரியாதது. அதே போல் மலையாள இயக்குனர்கள் தமிழ்ப்படம் இயக்கினால் அந்த படத்தில் சார்லி இல்லாமல் இருக்க மாட்டார். பாஸில்,பிரியதர்ஷன் என பல மலையாள இயக்குனர்கள் இயக்கிய தமிழ்ப்படங்களில் சார்லி கண்டிப்பாக இருப்பார்.

சார்லிக்கு நகைச்சுவைதான் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவர்கள், சார்லி நடித்த வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தை பார்த்தால் அப்படி சொல்ல மாட்டார்கள். வெளிநாடு செல்ல பணத்தை கொடுத்து ஏமாந்தவன் எப்படி இருப்பான் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் இவர். நகைச்சுவையிலும் காலமெல்லாம் காதல் வாழ்க, பூவே உனக்காக, சீவலப்பேரி பாண்டி,ப்ரண்ட்ஸ் உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களில் கலக்கி இருப்பார் இவர். சமீபத்தில் இவர் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சார்லி இன்று இவரது பிறந்த நாள் நீடுழி வாழ நாம் வாழ்த்துவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன