பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், இவரது இயக்கத்தில் மலையாளத்தில் மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்கம் என்ற மலையாளப்படம் தயாராகி வருகிறது.
சரித்திரக்கால படமான இதில் மோகன்லால் நடித்துள்ளார். இவருடன் தமிழ் நடிகர்கள் , பிரபு மற்றும் அர்ஜூனும் நடித்துள்ளனர்.
இப்படம் அப்படியே தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் வருகிறது. தமிழ் நடிகர்களும் இப்படத்தில் இருப்பதாலும் சரித்திரகால பின்னணி இருப்பதாலும் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரெய்லரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.