நடிகர் அஜீத் நீண்ட காலமாக சினிமாவில் நடித்து வருகிறார். நேற்று வந்த நடிகர்கள் கூட தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் ஆரம்பித்து தனது சுய தம்பட்டங்களை பதிவிடுவது வழக்கம்.
ஆனால் தனக்கென ஒரு பெரும் திரளான ரசிகர்கள் இருந்தும் தல தல என உயிரைக்கொடுக்கும் அளவு ரசிகர்கள் இருந்தும், எதையும் பின்பற்றாமல் சோசியல் மீடியாவில் கூட அஜீத்குமார் இல்லாமல் இருக்கிறார்.
இந்நிலையில் அஜீத் சோசியல் மீடியாவுக்கு வந்து விட்டதாக அவரின் போலி கையெழுத்துடன் தகவல் பரவியதால் அதிர்ச்சியடைந்த அஜீத் இது தொடர்பாக தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவின் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது போல சோஷியல் மீடியாவுக்கு வந்ததாக சொல்வதை முற்றிலும் இவர் மறுத்துள்ளார்.