பசுமையான நினைவுகள் எல்லா இதயங்களுக்கும் நெருக்கமான படம் இன்று நேசி ஒவ்வொரு நாளும் நேசி. லவ் டுடே எவ்ரி டே இப்படியான ஒரு ஸ்டேடசை எழுதி இருப்பவர் ஸ்ரீமன்.
சேது படம் மூலமே ஸ்ரீமன் அதிகம் அறியப்பட்டாலும் அதற்கு முன்பிருந்தே நீண்ட வருடமாக ஸ்ரீமன் நடித்து வருகிறார். அதிலும் நடிகர் விஜய்யுடன் தற்போது வர இருக்கும் மாஸ்டர் வரை எத்தனையோ படங்களில் நடித்து விட்டார்.
விஜய்யுடன் ஆரம்ப காலத்தில் இவர் நடித்து ஹிட் அடித்த திரைப்படம் லவ் டுடே, பாலசேகரன் இயக்கத்தில் வந்த இந்த படம் பெரிய ஹிட் படமாகும்.
இந்த படத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துதான் ஸ்ரீமன் மேற்கண்ட முதல் வரியில் உள்ள வாசகத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.