ஒரு காலத்தில் நாய், யானை, ஆடு,பாம்பு என அனைத்து வகை விலங்குகளையும் வைத்து படம் எடுத்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ். தற்போதைய காலத்தில் அதை நினைத்து கூட பார்க்க முடியாது. ஏனென்றால் விலங்குகளை பயன்படுத்துவதற்கு அதிக சட்ட திட்டங்கள் உள்ளது.
தேவர் பிலிம்ஸ் யானைகளுடன் எம் ஜி ஆரை வைத்து இயக்கி பெரும் ஹிட் அடித்த படம் நல்ல நேரம். அது போலவே மற்றொரு படத்தை இயக்க விரும்பி கமல்ஹாசனை வைத்து இயக்கிய படம்தான் ராம் லட்சுமண்.
7.3.1981ம் ஆண்டு வந்த திரைப்படத்தில் யானையுடன் கமல்ஹாசன் நடித்திருந்தார். கமலுக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்து இருந்தார்.
இந்த படமும் பரவலாக எல்லா ரசிகர்களிடம் கொண்டாடப்பட்டது தேவர் பிலிம்சுக்கு நல்லதொரு வசூலை கொடுத்தது.
இன்றுடன் இப்படம் ரிலீஸ் ஆகி 39 வருடங்கள் ஆகிறது.தேவர் பிலிம்ஸ் குடும்பத்தை சேர்ந்த சில வருடம் முன் மறைந்த இயக்குனர் தியாகராஜன் இப்படத்தை இயக்கி இருந்தார். இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.