கொரோனா வைரஸ் எதிரொலி: மாஸ்டர் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் ஐபிஎல் போட்டி உள்பட பல முக்கிய நிகழ்வுகள் தள்ளிவைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேரளாவில் திரையரங்குகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்றும்…


b2578f52669e85c3cbd4417ccaa2ac2f-1

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் ஐபிஎல் போட்டி உள்பட பல முக்கிய நிகழ்வுகள் தள்ளிவைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேரளாவில் திரையரங்குகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டப்படி ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகுமா அல்லது கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்படுமா? என்ற தகவல் அனைவரையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்ற மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ள நிலையில் திரையரங்குகள் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன