சமீப நாட்களாக அடிக்கடி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கை நண்பர்களை சந்தித்த ரஜினிகாந்த மீடியாக்களின் வாய்க்கு அவலாக ஏதாவது கருத்துக்களை சொல்வதும் அதை வைத்து மீடியாக்கள் டிஃபெட் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.
சில நாட்களில் கட்சி தொடங்குவார் என பலரும் எதிர்பார்த்து வந்தனர் இந்த வருடம் கட்சி தொடங்கி அடுத்த வருடம் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அரசியலில் இருந்து பின் வாங்கும் வகையில் ரஜினி பேசியுள்ளார்.
சினிமா புகழை வைத்துக்கொண்டு அரசியலில் நான் ஜெயிக்க முடியாது, நான் முதல்வர் இல்லை என்று சொல்லி அதனால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டபின் அரசியலுக்கு வருகிறேன் .
நீங்கள் சொல்வதுபோல் கட்சி ஆரம்பிக்கிறேன்.அதை அறிவிக்க 15 லட்சம் பேர் உடைய மாநாடு கூட்டி,கொடி அறிமுகம் செய்து அறிவித்தால் அடுத்த தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும்! மக்களிடம் எழுச்சியில்லாமல் போட்டியிட்டு 10-15% வாக்கு வாங்க நான் அரசியலுக்கு வரவேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார் இவர். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.