ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு முதலே பிரச்சினைகள் இருந்து வருகிறது. தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி புகார் கூறி இருந்தார்.
ஆரம்பத்தில் இதை விசாரித்த வளசரவாக்கம் போலீஸ் இதை கைவிட்டு விட்டது.
தற்போது சில நாட்களாக இப்பிரச்சினையை கையில் எடுத்திருக்கும் விஜயலட்சுமி அடிக்கடி அதிரடியாக ஒரு வீடியோ வெளியிட்டு நாம் தமிழர் கட்சியினரையும் சீமானையும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இரண்டு நாட்கள் முன் அவர் வெளியிட்ட வீடியோவில் மிகவும் மோசமான வார்த்தைகளால் சீமானையும் அவர் சார்ந்த யூ டியூப் சேனலையும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் விஜயலட்சுமி ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார் சீமான் தூண்டுதலால் அவரது கட்சியினர் தொடர்ந்து தன்னை கொச்சைப்படுத்தி பேசி வருவதாகவும் தான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விஜயலட்சுமி புகார் மனுவில் கூறியுள்ளார்.