துப்பறிவாளன் 2 படத்தை தற்போது விஷால் இயக்கி வருகிறார். இப்படத்தை மிஷ்கின் இயக்குவதாக இருந்தது. இந்த நிலையில் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே மோதல் வலுத்தது.
இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். நேற்று நடந்த ஒரு விழாவில் விஷாலை கடுமையாக சாடியுள்ளார் மிஷ்கின்.
ஏகத்துக்கும் விஷாலை வாரியுள்ளார் மிஷ்கின். என் தாயை வேசி என்று திட்டினான் விஷால் அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. நீ ஒரு பொறுக்கி பயடா உன்னைய தெரியுண்டா சமூகத்துக்கு என்று கொஞ்சம் கோபம் கொந்தளிக்க மேடையில் எமோஷனல் ஆன மிஷ்கின் தேர்தலுக்கு நீ எப்படி மனுத்தாக்கல் செஞ்ச என்று எனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.
டேய் தம்பி விஷாலு உன் கூஜா வேலைலாம் காட்டாத இன்னைலருந்து நீ தூங்க மாட்ட உன் சைடுல தர்மம் இருந்தா வாடா குருஷேத்ர போருக்கு என கடுமையாக மோதியுள்ளார் மிஷ்கின்.