நடிகை கஸ்தூரி சமூகத்தில் நடக்கும் ஏதாவது நிகழ்வுகளுக்கு தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்து கொண்டே இருப்பார்.அப்படியாக கஸ்தூரி இன்று டாக்டர் பட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
டாக்டர் பட்டம் ஒரிஜினலாக வாங்கியது போக காசு கொடுத்து வாங்கும் டுபாக்கூர்கள் அதிகம் ஆகி விட்டனர் என்பது தெரிந்த விசயம்தான்.
பல திறந்த நிலை பல்கழைக்கழகங்கள் சரியான படிப்பறிவில்லாதவருக்கும் சும்மா பில்டப்புக்காக பணம் வாங்கி கொண்டு டாக்டர் பட்டம் கொடுத்து வருகிறது. இதை கஸ்தூரி தனது டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
டாக்டர் பட்டம் வாங்குறது பெரிய கவுரவம்னு நினைச்சேன்…. அட பாவிங்களா, மெய்யாலுமே ” வாங்குறது’ தானா !!! பள்ளி படிப்பை முடிக்காதவங்க, தமிழ் தெரியாதவங்க எல்லாருக்கும் டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் என்னடா இது டாக்டர் பட்டத்துக்கு வந்த சோதனை! என கஸ்தூரி கூறியுள்ளார்.